ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தைப்பூச திருத்தேரோட்டம்

ஆலத்தூர் அருகே செட்டிகுளம் காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில்நடந்த தைப்பூச திருத்தேரோட்டதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில். பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலில் தைப்பூச திருத்தேரோட்ட விழாவானது ஜன.17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்நது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஜனவரி 25ஆம் தேதி மாலை நடைபெற்றது. அருள்மிகு காமாட்சி அம்மன் ஒரு தேரிலும், அருள்மிகு பிரியாவிடை அம்மன் ஏகாம்பரேஸ்வரர், வள்ளி தெய்வானை முருகப்பெருமாள் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திருத்தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.இவ்விழாவில் செட்டிகுளம் ,பாடாலூர், ஆலத்தூர், உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags

Next Story