வண்டியூரில் தைப்பூச தெப்பத் திருவிழா: தெப்பம் கட்டும் பணி மும்முரம்
தெப்பம் கட்டும் பணிகள் தீவிரம்
வண்டியூர் தெப்பக்குளத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தெப்பம் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தமிழ் மாதத்தின் ஒவ்வொரு மாதமும் திருவிழாதான் அந்தவகையில் சித்திரை, புரட்டாசி, தை மாத திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றது.
அதிலும் தைப்பூச தெப்பத் திருவிழாவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மீனாட்சிசுந்தரேஸ்வரர் தெப்பக்குளத்தில் எழுந்தருளி காலை மாலையில் சுற்றிவந்து பக்தர்களுக்கு காட்சி தருவர்.
அந்தவகையில் தை மாதம் நடைபெற உள்ள வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் தைப்பூச தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குளத்தில் தெப்பம் கட்டுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Next Story