செய்யாற்றில் தைப்பூச ஆற்றுத்திருவிழா

செய்யாற்றில் தைப்பூச ஆற்றுத்திருவிழா


செய்யாற்றில் தைப்பூச ஆற்றுத்திருவிழாவில்


22 கிராம உற்சவ மூர்த்திகள் ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்


செய்யாற்றில் தைப்பூச ஆற்றுத்திருவிழாவில் 22 கிராம உற்சவ மூர்த்திகள் ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

தைப்பூசத்தையொட்டி செய்யாற்றில் 22 கிராமங்களை சேர்ந்த உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பா லித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பட்டுவதனாம்பிகை சமேத பிரம்ம புரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் பல நூற்றாண்டுகளாக தை மாதம் பிறந்து சப்தமி திதியில் கொடியேற்றம் செய்யப்பட்டு தைப்பூச பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கடந்த 17ம்தேதி கொடியேற்றத்து டன தைப்பூச பெருவிழா தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் பிரம்மபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து நிறைவு நாளான நேற்று நள்ளிரவு செய்யாற்றில் 22 கிராமங்களை சேர்ந்த உற்சவமூர்த்திகள் ஒன்று கூடி அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது. அதன் படி பெருந கர்பிரம்மபுரீஸ்வரர் மற்றும் மானாம்பதி, விசூர், தண்டரை, சேத் துப்பட்டு, மேல்பாக்கம் ஆகிய கிராமங்கள் மற் றும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அனக்காவூர் ஒன்றியத்தில் உள்ள உக் கல், அத்தி, கீழ்நேத்தப் பாக்கம், வெங்கடாபுரம், தேத்துறை, கீழ்நீர்குன்றம், இளநீர்குன்றம், ஆக்கூர் கூழமந்தல், மகாஜனம் பாக்கம், வெள்ளாமலை, மடிப்பாக்கம், நெடுங்கல், குன்னவாக்கம், அகத்தி, அண்ணாநகர் உள்ளிட்ட 22 கிராமங்களில் உள்ள சிவபெருமான் உற்சவ மூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பெருநகர்- உக்கல் இடையே உள்ள செய்யாற்றில் எழுந்தருளினர்.

இன்று அதிகாலை வாணவேடிக்கை மற்றும் சிவவாத்தியங்கள் முழங்க சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் கொட்டும் பனியை பொருட்படுத்தா மல் பங்கேற்று தரிசித்த னர். பின்னர் உற்சவமூர்த் திகள் தங்கள் ஊர்களுக்கு சென்றனர்.

Tags

Next Story