ஆயிரம் காவடிகள் ஊர்வலத்துடன் தைப்பூச திருநாள்

ஆயிரம் காவடிகள் ஊர்வலத்துடன் தைப்பூச திருநாள்

தைப்பூச ஊர்வலம்

குமாரபாளையத்தில் ஆயிரம் காவடிகள் ஊர்வலத்துடன் தைப்பூச திருநாளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள பாலமுருகன் கோவிலில், அறுபடை யாத்திரை குழுவினர் சார்பில், தைப்பூச விழாவையொட்டி, யாக பூஜை, 108 சங்காபிஷேகம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தபட்டது. காவிரி ஆற்றிலிருந்து மேள தாளங்கள் முழங்க தீர்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டன. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் சார்பில் பக்தி பாடல்கள் பாடப்பட்டன.

குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவில், கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மம் கோவில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், நடன விநாயகர் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் அம்மன் மற்றும் முருகப்பெருமான் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, சூரியகிரி மலை முருகன் கோவில் சார்பில் ஆயிரம் காவடிகள் அலங்கரிக்கப்பட்டு, காவிரி ஆற்றிலிருந்து ஊர்வலமாக பக்தர்களால் எடுத்து வரப்பட்டது. கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

Tags

Next Story