மேலூரில் நடைபெற்ற தைப்பூச உற்சவ விழா: பக்தர்கள் பால்குடம் எடுத்து,பூங்குழி இறங்கி வழிபாடு
பூங்குழி இறங்கி வழிபாடு
மேலூர் அருகே நடைபெற்ற தைப்பூச உற்சவ விழா: ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பூங்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு
மேலூர் அருகே நடைபெற்ற தைப்பூச உற்சவ விழா: ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பூங்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு மதுரை மாவட்டம் மேலூர் அருகே செம்மணிப்பட்டியில் உள்ள ஆண்டிப்பாலகர் திருக்கோவிலில் தைப்பூச உற்சவ விழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றது. இதனையொட்டி கடந்த 16ஆம் தேதி காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது. இதனைத்தொடர்ந்து இன்று தைப்பூச உற்சவத்தையொட்டி, காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டு வரும் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தும், பூங்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தி ஆண்டிபாலகரை வழிபட்டனர். தொடர்ந்து, இன்று மாலை பெண்களின் கரும்புத்தொட்டி ஊர்வலமும், நாளை மஞ்சுவிரட்டு போட்டியுடன் விழா நிறைவடைய உள்ளது. இத்திருவிழாவில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிப்பட்ட நிலையில், கீழவளவு காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்....
Next Story