கழுகாசலமூா்த்தி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

கழுகாசலமூா்த்தி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

கழுகுமலை, கழுகாசலமூா்த்தி கோயிலில் கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா துவங்கியது.

கழுகுமலை, கழுகாசலமூா்த்தி கோயிலில் கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா துவங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, அதிகாலையில் காலையில் திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னா் காலை 5.15 மணிக்கு மேல் 5.45 மணிக்குள் கொடியேற்று விழா நடைபெற்றது.

தொடா்ந்து, கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவற்றிற்கு 18 வகையான மூலிகை பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் கோயில் நிா்வாக அலுவலா் காா்த்தீஸ்வரன் மற்றும் கோயில் பணியாளா்கள், உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story