தலைவாசல் மோட்டார் சைக்கிள் திருடன் கைது !

தலைவாசல் மோட்டார் சைக்கிள் திருடன் கைது !

கைது

தலைவாசல் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய நபரை போலிசார் கைது செய்தனர்.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம்கெங்கவல்லி தலைவாசல் அருகே பெரியேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆனந்தன். இவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுதொடர்பான புகாரின் பேரில் தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த ரபிக் மகன் ரஷீத் (வயது 27) என்பவர் திருடி சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் ரஷீத்தை கைது செய்து மோட்டார் சைக்கிளை மீட்டனர். ரஷீத் மீது சூரமங்கலம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 2022- ம் ஆண்டு திருட்டு வழக்கில் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.

Tags

Read MoreRead Less
Next Story