தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

ரயில்வே சேவை நீட்டிப்பு

தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை இரண்டு மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு மதுரை வழியாக இயக்கப்படும் தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில்கள் சேவை ஜனவரி மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நாகர்கோவிலில் இருந்து மாலை 04.35 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரயில் (06012) பிப்ரவரி 04, 11, 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து காலை 08.05 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரயில் (06011) பிப்ரவரி 5, 12, 19, 26, மார்ச் 04, 11, 18, 25 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டு இரவு 08.55 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு புதன்கிழமை (ஜனவரி 31) காலை 8 மணி முதல் துவங்க இருக்கிறது.

Tags

Next Story