தம்மம்பட்டி உலிபுரத்தில் கம்ப பெருமாள் கோவில் தேர்த்திருவிழா

தம்மம்பட்டி உலிபுரத்தில் கம்ப பெருமாள் கோவில் தேர்த்திருவிழா
தம்மம்பட்டி
தம்மம்பட்டி உலிபுரத்தில் கம்ப பெருமாள் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உலிபுரம் கிராமத்தில் கம்ப பெருமாள், மாரியம்மன் தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் பக்தர்கள் அலகு குத்துதல், சுவாமி போல் வேடமிட்டு நேர்த்தி கடனை செலுத்தினர்.

இன்று கம்ப பெருமாள் தேரில் அலங்கரித்து முக்கிய வீதிகள் வழியாக ஊர் பொதுமக்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, உலிபுரம் புதூர், நாரைக்கிணறு ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தம்மம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தேர் 2 நாள் வடம் பிடித்து இழுப்பது வழக்கம். நேற்று விநாயகர் கோவிலில் தேர் நிறுத்தப்பட்டுள்ளது. தேர்கோவிலுக்கு வந்து நிலையை அடையும்என்று விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

Tags

Next Story