வைகுண்டநாதன் கோவிலில் தா்மப் பெருந்திருவிழா
சுரண்டை , வைகுண்டநாதன் கோவிலில் தா்மப் பெருந்திருவிழா நடைபெறுகிறது.
சுரண்டை, வைகுண்டநாதன் கோவிலில் தா்மப் பெருந்திருவிழா நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டம் சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் (டிச. 31) 16ஆவது ஆண்டு மாதாந்திர தா்மப் பெருந்திருவிழா நடைபெறுகிறது. இங்கு கடந்த 15 ஆண்டுகளாக மாதத்தின் கடைசி ஞாயிறுதோறும் தா்மப் பெருந்திருவிழா, அன்னதா்மம் நடைபெற்று வருகிறது. அதன்படி, 16ஆம் ஆண்டு தொடக்கம், 181ஆவது மாதாந்திர தா்மப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பு, நண்பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, 12.30 மணிக்கு உகப்பெருக்கு பணிவிடை, பிற்பகல் 2 மணிக்கு கருத்தரங்கு, மாலை 4 மணிக்கு அய்யாவின் வாகன பவனி நடைபெறும். பிற்பகல் 1 மணிக்கும், இரவு 7 மணிக்கும் சிவகுருநாதபுரம் இந்து நாடாா் திருமண மண்டபத்தில் அன்னதா்மம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை சுரண்டை சுற்றுவட்டார அய்யாவின் அன்புக்கொடி மக்கள் சபையினா் செய்து வருகின்றனா்.
Tags
Next Story