மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய தங்கதுரை
மரக்கன்றுகள் நடும் விழா
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 11-வது வார்டில் உள்ள பூங்காவை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்பு மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவான வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற திட்டத்தை பின்பற்றி மரங்களை நட்டு மக்கள் மனதில் இடம் பிடித்த மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களும் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வந்தார். இவர்களைப் பின்பற்றி விஜய் தொலைக்காட்சி புகழ் நகைச்சுவை நடிகரான தங்கதுரை திருவள்ளூர் நகராட்சியில் முதல் கட்டமாக மரக்கன்றுகளை நட்டு வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 11-வது வார்டில் 96 சென்ட் பரப்பளவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் வாகை டிரஸ்ட் மூலம் பூங்காவை அமைத்து பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் டிவி புகழ் தங்கதுரை கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கியும், பூங்காவில் மரக்கன்றுகளை நட்டும் விழாவை சிறப்பித்தார். அப்துல் கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் ,மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகளை நட்டு வந்தார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்,மறைந்த நடிகர் விவேக்கைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளாதகவும், அதன்படி முதல் நிகழ்வாக இன்று பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்திருப்பதாகவும் விஜய்டிவி புகழ் தங்கதுரை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் வி.இ.ஜான், டி.கே.பாபு , பிரபாகரன் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.