தாம்பூலம் வைத்து வாக்களிக்க அழைத்த தஞ்சாவூர் ஆட்சியர் !

தாம்பூலம் வைத்து வாக்களிக்க அழைத்த தஞ்சாவூர் ஆட்சியர் !

தீபக் ஜேக்கப்

நூறு விழுக்காடு வாக்குச் செலுத்த பத்திரிகையுடன் பூ, பழம், வெற்றிலை பாக்கு, இனிப்புடன் தாம்பூலம் வைத்து, ஆட்சியர் தீபக் ஜேக்கப் அழைப்பு விடுத்தார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் ஏப்.19 ஆம் தேதி தமிழகத்தில் முதற்கட்டமாக தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, பொதுமக்கள் நூறு விழுக்காடு வாக்கு செலுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, தஞ்சாவூரில் திங்கள்கிழமை தமிழ்வழி சாலை ஜவான் தெருவில், வாக்காளர்களிடம் வாக்குப்பதிவு தினத்தன்று தாங்கள் தவறாமல் வாக்கு அளித்து, தேர்தல் கடமையாற்ற வேண்டும் என பத்திரிகையுடன் பூ, பழம், வெற்றிலை பாக்கு, இனிப்புடன் தாம்பூலம் வைத்து, ஆட்சியர் தீபக் ஜேக்கப் அழைப்பு விடுத்தார். அதன் பிறகு, புதிய பேருந்து நிலையம், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கினார். அழைப்பிதழில்: வீட்டு விஷேசத்திற்கு அச்சடிக்கும் அழைப்பிதழ் போல, தேர்தல் திருவிழா, தேசத்தின் திருவிழா, தஞ்சாவூர் மக்களைவைத் தொகுதி, தேர்தல் திருவிழா அழைப்பிதழ் என துவங்கி, நிகழும் மங்களகரான திருவள்ளூவராண்டு 2055 சித்திரை 6 ஆம் நாள் (19.04.2024) வெள்ளிக்கிழமை நலம் தரும் நன்னாளில், காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் திருவிழா, தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெறுகிறது. இவ்விழாவில் தாங்கள் தங்கள் சுற்றுமும் நட்பும் சூழ வருகைதந்து தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்து நமது மாவட்டத்தில் நூறு விழுக்காடு வாக்குப்பதிவு நடத்தி தங்கள் உரிமையை நிலைநாட்டிட அன்புடன் அழைக்கின்றோம்" என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது.

Tags

Next Story