தஞ்சாவூர் மாவட்டம் 93.40 விழுக்காடு தேர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம் 93.40 விழுக்காடு தேர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 93.40 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 93.40 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.40 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு மாநில அளவில் 17-ஆம் இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த ஆண்டு 15 ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வை மாணவர்கள் 14,402 பேர் எழுதினர். மாணவிகள் 14,513 பேர் எழுதினர். மொத்தம் மாணவ, மாணவிகள் 28,915 தேர்வு எழுதி இருந்தனர். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவர்கள் 13,032 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 13,974 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் மாணவ, மாணவிகள் 27,006 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் தேர்ச்சி 90.49 விழுக்காடு, மாணவிகள் தேர்ச்சி 96.29 விழுக்காடும் பெற்றனர். மொத்தம் 93.40 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பத்தாம் வகுப்பு தேர்வில் கடந்த ஆண்டு 92.16 விழுக்காடு பெற்று மாநில அளவில் 17-ஆம் இடத்தை பிடித்திருந்தது.

இந்த ஆண்டு இரண்டு இடம் முன்னேறி 15-ஆம் இடத்தை பிடித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 228 அரசு பள்ளிகளில் மாணவர்கள் 6,019 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தனர். மாணவிகள் 6,380 பேர் தேர்வு எழுதியிருந்தனர். மொத்தம் 12,399 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 5,261 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 6,006 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 11,267 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு 87.41 ஆகும். மாணவிகளின் தேர்ச்சி விழுக்காடு 94.14 ஆகும். மொத்த தேர்ச்சி விகிதம் 90.87 விழுக்காடு ஆகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் 67 அரசு பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியை பெற்றுள்ளது.

Tags

Next Story