தஞ்சாவூர் திமுக வேட்பாளர் பயோ-டேட்டா

தஞ்சாவூர் திமுக வேட்பாளர் பயோ-டேட்டா
X

முரசொலி

தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முரசொலி குறித்த விவரங்கள்

திமுக கூட்டணியில், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திமுக வேட்பாளர் பயோ டேட்டா

பெயர் - ச.முரசொலி B.Sc, L.L.B தந்தை பெயர் - கே.சண்முகசுந்தரம் தாய் - தர்மசமத்தினி மனைவி - எஸ்.பொற்செல்வி மகன் - எஸ்.ஆதவன்

தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் வட்டம். திருவையாறு சட்டமன்றத் தொகுதி, தென்னங்குடி கிராமத்தில் கே.சண்முகசுந்தரம்- தர்மசமத்தினி தம்பதியினரின் மூன்றாவது மகனாக 26.06.1978 ல் பிறந்தார்.

இவருடைய தாத்தா எஸ்.கந்தசாமி நாட்டார் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியில் இயக்குநராக இருந்தவர், இவரது தந்தை 1971-ஆம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவராகவும் , தென்னங்குடி தொடக்க வேளாண்மை சங்க தலைவர் பதவி வகித்தவர். முரசொலி இயற்பியல் இளங்கலை பட்டப் படிப்பை தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியிலும் , இளங்கலை சட்டப் படிப்பை பெங்களூர் ராம் மனோகர் லோகியா சட்ட பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார்.

இவர் 2004 முதல் தென்னங்குடி ஊராட்சி பிரதிநிதியாகவும், 2006 – 2011 வரை தஞ்சாவூர் ஒன்றியக்குழு உறுப்பினராகவும், 2014 - 2020 வரை தி.மு.க பொதுக்குழு உறுப்பினராகவும், 2020 தஞ்சை வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு. 2022 ல் நடைபெற்ற தி.மு.க வின் 15 ஆவது அமைப்பு தேர்தலில் தஞ்சை வடக்கு ஒன்றியக் கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags

Next Story