தஞ்சாவூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தஞ்சாவூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தஞ்சாவூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

தஞ்சாவூர் மகாராஜா மகாலில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை உரிமை துறை சார்பில், ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் 8 கிராம் தங்கம் மற்றும் மக்களிடம் முதல்வர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், "தஞ்சை கோட்டத்துக்கு உட்பட்ட 31 பயனாளிகளுக்கு, ரூபாய் 4 கோடியே 46 லட்சத்து 68 ஆயிரத்து 680 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

சமூக நலத்துறையின் கீழ், அனைத்து திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 617 பட்டதாரி பயனாளிகளுக்கும், 207 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கும் என மொத்தம் 824 பயனாளிகளுக்கு, தலா 8 கிராம் தாலிக்கு தங்கம், ரூபாய் 3 கோடியே 81 லட்சத்து 75 ஆயிரத்து 390 மதிப்பிலும்,

614 பட்டதாரி பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம், ரூ.3 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரமும், 207 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் வீதம், ரூ.51 லட்சத்து 75 ஆயிரம் நிதியுதவித் தொகை என, கூடுதல் ரூ.3 கோடியே 80 லட்சத்து 25 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.7 கோடியே 62 லட்சத்து 390 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது" என்றார். தொடர்ந்து, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு,

ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு, வங்கி பெருங்கடன்களுக்கான காசோலைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி,

மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அனுராபூ நடராஜமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story