தஞ்சாவூர் கல்லணைக் கால்வாய் ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
தஞ்சாவூர் கல்லணைக் கால்வாய் ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
தஞ்சாவூரில் கல்லணை கால்வாயில் ஆற்றில் இறங்கி, மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் வி.சோமண்ணாவின் உருவ பொம்மையை வைத்து தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு, தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமை வகித்தார். போராட்டத்தில், காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்தும், மேகேதாட்டு அணை கட்டுவதை தொடர்பாக கர்நாடக அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் சோமண்ணாவை கண்டித்தும், குறுவை சாகுபடியில் விவசாயிகளுக்கு தொடர்ந்து 16 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும், 2022 - 2023 ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீடு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு படி தமிழகத்துக்குரிய தண்ணீரை கர்நாடக அரசிடமிருந்து மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கல்லணைக் கால்வாய் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் சோமண்ணாவின் உருவ பொம்மையை வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story