தஞ்சாவூர் : நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தஞ்சாவூர் :  நலத்திட்ட உதவிகள் வழங்கல்
பயனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் ஆட்சியர்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் பயனாளிகளுக்கு வழங்கினார்,

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 605 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினர்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.96,011 /- மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 6 நபர்களுக்கும், தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் சசிகலா என்பவருக்கு தாட்கோ மானியம் விடுவித்த ஆணையினையும், மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து அரும்பு என்பவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது தொடர் சிகிச்சை பயன்பாட்டிற்காக ஆக்ஸிஜன் செறிவூட்டினையும், மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், தாட்கோ மாவட்ட மேலாளர் தா.ரெங்கராஜன், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) எஸ்.சங்கர், உதவி ஆணையர் (கலால்) எம்.ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story