தமிழ் பல்கலைக்கழகத்தில் புதிய அறக்கட்டளை தொடக்கம்

தமிழ் பல்கலைக்கழகத்தில் புதிய அறக்கட்டளை தொடக்கம்
அறக்கட்டளை துவக்கம்
தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்வளர்ச்சி கல்வி மற்றும் மேம்பாடு தொடர்பாக புதிய அறக்கட்டளை தொடக்கம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், அமெரிக்காவின் ரோடு ஐலண்டில் வாழும் டாக்டர் சு.திருஞானசம்பந்தம் அவரது துணைவியார் விஜயலட்சுமி இணைந்து, விஜயலட்சுமி திருஞானசம்பந்தம் தமிழ் அறக்கட்டளை என்ற பெயரில் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய அறக்கட்டளையை நிறுவினர்.

உலகமெங்கும் தமிழ்க் கல்வி, தமிழ்ப் பண்பாடு, தமிழ்ச் சமயநெறி தழைக்க வேண்டுமெனும் உயர்நோக்கில், தங்கள் குடும்ப வருவாயின் ஒரு பகுதியை தமிழுக்கென்று அமைந்த “தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், ரூ.30 லட்சத்துக்கான காசோலையினை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவனிடம் வழங்கினர்.

இந்நிகழ்வில் மூத்த பேராசிரியர் முனைவர் கு.வெ.பாலசுப்ரமணியன், பதிவாளர் (பொ) முனைவர் த.கண்ணன், ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் ரெ.நீலகண்டன், மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் இரா.சு.முருகன், கண்காணிப்பாளர்கள் முனைவர் மா.சுந்தரபாண்டியன், கி.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story