தஞ்சாவூர் திருவள்ளுவர் வணிக வளாகம் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் திறப்பு

X
தஞ்சாவூர் வணிக வளாகத்தை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, தஞ்சாவூர் மாநகராட்சி , நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக ரூ.53 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட, திருவள்ளுவர் வணிக வளாகக் கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக சனிக்கிழமை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் முன்னிலையில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே,ஜி.நீலமேகம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். தஞ்சாவூர் மாநகராட்சி சீர்மிகு நகர திட்டப்பணிகளின் கீழ் திருவள்ளுவர் திரையரங்கத்தை, வணிக வளாகமாக மாற்றும் பணி ரூ.53 கோடி மதிப்பீட்டில் மொத்த இடத்தின் பரப்பளவு 9178 சதுர மீட்டர் (98,790 சதுர அடி), அடித்தளம், தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் கொண்டதாக உள்ளது. அடித்தளம் 4738,50 சதுர மீட்டர் (51,005 சதுர அடி), தரைத்தளம் 4,117.50 சதுர மீட்டர் (44,321 சதுர அடி) முதல் தளம் 4,038 30 சதுர மீட்டர் (43,468 சதுர அடி), இரண்டாம் தளம் 4,321.31 சதுர மீட்டர் (46,515 சதுர அடி) என மொத்தம் 47 கடைகள் + 3 பெரிய கடைகள் கொண்டதாக உள்ளது. வாகன நிறுத்துமிடத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் 30 எண்ணிக்கையிலும், நான்கு சக்கர வாகனங்கள் 130 எண்ணிக்கையிலும், மின்தூக்கி. நகரும் படிக்கட்டுகள் மற்றும் கழிவறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கு நுழைவு மற்றும் வெளியே செல்வதற்கு தனித்தனியாக வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளுவர் திரையரங்கத்தை வணிக வளாகமாக மாற்றும் பணியில் கூடுதல் பணிகள் ரூ.15.66 கோடி மதிப்பீட்டில் பல அடுக்கு கார் நிறுத்தும் வசதியில் 56 கார்கள் நிறுத்தும் வசதி, வணிக வளாகம் முழுவதும் குளிர் சாதனம் வசதி, அனைத்து தளங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தீயணைப்பு வசதிகள், பல அடுக்கு கார் நிறுத்தும் பகுதியில் மின்சார வசதி, மின்னல் தடுப்பு போன்ற வசதிகள் அமைக்கப்படுள்ளது. இந்நிகழ்ச்சியில், தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் மரு அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் திர மகேஸ்வரி, மாநகராட்சி பொறியாளர் சேர்மகனி, உதவி செயற்பொறியாளர்கள் மனோகரன், ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story