தஞ்சாவூரில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் 

தஞ்சாவூரில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் 

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

தஞ்சாவூரில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்

பி.பி.505 ஐ காலதாமதமின்றி அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்ப்புகளில், அரசு மேல் முறையீடு செய்யக் கூடாது. ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியமாக ரூ.11,401 ஐ வழங்க வேண்டும்.

ஊதியத்தை வங்கி மூலம் வழங்க வேண்டும். சட்டப்படியான ஊதியத்திற்கு இஎஸ்ஐ, இபிஎஃப் செலுத்த வேண்டும். வார விடுப்பு, தேசிய பண்டிகை தினங்களில் விடுமுறை தினங்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசையும்,

குடிநீர் வாரிய நிர்வாகத்தையும் வலியுறுத்தி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கரூ‌ர் மாவ‌ட்ட குடிநீர் வடிகால் வாரியம் சிஐடியு ஊழியர் சங்கம் சார்பில், தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி, குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு புதன்கிழமை காத்திருப்பு இயக்கம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். சிஐடியு நிர்வாகிகள், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் கே.முகமது அலி ஜின்னா, நாகை மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி, அரியலூர் மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி,

மத்திய அமைப்பு பொருளாளர் பி.குணசேகரன், உதவித் தலைவர் ஆர்.மருதைராசு, குடிநீர் வாரிய சிஐடியு புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் எஸ்.யாசிந்த், குடிநீர் வாரிய சிஐடியு திருச்சி மாவட்டத் தலைவர் கே.செந்தில்குமார், நாகை மாவட்டச் செயலாளர் எஸ்.மனோகரன், நாகை மாவட்டத் தலைவர் எம்.ஆசைத்தம்பி, சிஐடியு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் கே.அன்பு, இ.டி.எஸ்.மூர்த்தி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

காத்திருப்பு போராட்டம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை நடைபெற்றது. இதையடுத்து குடிநீர் வடிகால் வாரிய உயர் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர்.

Tags

Next Story