ராசிபுரம் அருகே பட்டாசு தயாரிப்பு ஆலையில் வட்டாட்சியர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர் ராசிபுரம் அடுத்த குட்டக்கரை பகுதியில் நவின் பட்டாசு தயாரிப்பு ஆலையை நடத்தி வருகிறார். தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் பல்வேறு வகை பட்டாசுகளை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இங்கு, ராசிபுரம் வட்டாட்சியர் சு.சரவணன், தலைமையில், ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் வெ. பலகாரராமசாமி, நாமகிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் எம். கணேஷ்குமார், மற்றும் ராசிபுரம் வருவாய் ஆய்வாளர் எம்.மோகன்ராசா, மற்றும் வடுகம் வி.ஏ.ஒ., அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகளையும், உரிய விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே உற்பத்தி மேற்கொள்ளப்படுவதையும் குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும், பட்டாசு உற்பத்தி, பட்டாசு குடோன்கள் ஆகியவற்றிற்கான அரசு வகுத்த சட்ட விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றப்படுகிறாத எனவும் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து தீ தடுப்பு முறைகள் குறித்தும், பட்டாசு ஆலையில் வேலைகள் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் குறித்த பல்வேறு தகவல்களை கேட்டறிந்தனர். மேலும் எளிதில் தீப்பற்றும் பொருட்களை அருகில் எதுவும் வைக்கக்கூடாது மேலும் அரசு கூறியுள்ள முறையான வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும், எனவும் வட்டாட்சியர் மற்றும் குழுவினர் பட்டாசு ஆலை உரிமையாளரிடம் தெரிவித்தனர்.