300 ஆண்டுகளுக்கு பின் திருப்பிரம்பிநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்
யாகசாலை பூஜைகளுடன் துவக்கம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் திருபிரம்பீஸ்வரர் உடனாய திரிபுரசுந்தரி கோவில் உள்ளது இக்கோவில் .திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். சிதலமடைந்து காணப்பட்ட இக்கோவிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் 2011 ஆம் ஆண்டு பாலாலயம் செய்து சிலைகளை ஒரு கட்டிடம் அமைத்து அதில் எடுத்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து பாலாலயம் நடத்தப்பட்டு 14 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்த இக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை ஐகோர்ட் ஐந்து பேர் கொண்ட குழுவினர் திருப்பணி செய்ய கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து திருக்கோவில் கும்பாபிஷேகம் செய்ய இந்து சமய அறநிலைத்துறையினர் சுற்றுச்சுவர் ரூ. 17 லட்சம் மதிப்பீட்டிலும் கோவில் அர்த்த மண்டபம் சுவாமி மண்டபம் அம்பாள் சன்னதிக்கு ரூ.23 லட்சம் மதிப்பீட்டிலும் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது
இதனை தொடர்ந்து நேற்று அனுக்சை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், முதலிய பூஜைகள் செய்யப்பட்டு யாகசாலை நிர்மானம் நடைபெற்றது தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு வாஸ்துசாந்தி, பிரவேசபலி, யாகசாலை பிரவேசம் முதற்கால யாக பூஜை தீபாராதனை அருட்பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது. தொடர்ந்து 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை அனைத்து மூர்த்திகளுக்கும் அடிபந்தனம், செய்தல் அஷ்டபந்தன சமர்ப்பணம், அருள் பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது, தொடர்ந்து மாலை 6 மணிக்கு மூன்றாவது யாகசாலை பூஜைகள் தீபாரதனை நடைபெறுகிறது.
மேலும் ஜூலை 1 ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை நான்காவது கால யாகசாலை பூஜை மகாபூர்ணா யாத்ரா தானம் கலசம் புறப்பாடு ஆலய வளம் நடைபெறுகிறது தொடர்ந்து காலை 6.45 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகமும், காலை 7 மணிக்கு அனைத்து மூர்த்திகளுக்கும் ஒரே காலத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் கார்த்திகா, மற்றும் திருக்கோவில் சிவாச்சாரியார் விஸ்வநாதர் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.