மூதாட்டி கழுத்தில் இருந்த 3 பவுன் செயின் பறிப்பு

மூதாட்டி கழுத்தில் இருந்த 3 பவுன் செயின் பறிப்பு
X

செயினை பறிகொடுத்த மூதாட்டி

வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த மூதாட்டி கழுத்தில் இருந்து 3 பவுன் செயின் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் எசனை சிவன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி ராமாயி. இவர் டிசம்பர் 21ஆம் தேதி இரவு ஒன்பது மணி அளவில் வீட்டின் வெளியே நின்ற கொண்டிருந்தபோது போது , அப்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர்.

இதனைத் தொடர்ந்து இதுகுறித்து பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு, மூதாட்டி இடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story