டூவீலரில் செல்லும்போது வாகனம் கட்டுப்பாட்டு இழந்ததால் கீழே விழுந்து விபத்து
விபத்து
டூவீலரில் செல்லும்போது வாகனம் கட்டுப்பாட்டு இழந்ததால் கீழே விழுந்து விபத்து. ஒருவர் படுகாயம்.
கரூரை அடுத்த தெற்கு காந்திகிராமம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் சரவணன் வயது 45. இவருக்கு சொந்தமான டூவீலரில் அதே இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் மகன் சபாபதி வயது 50 என்பவரை பின்னால் அமர வைத்துக் கொண்டு, மார்ச் 29ஆம் தேதி மாலை 7 மணி அளவில் திருச்சி - கரூர் சாலையில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் வீரராக்கியம் பிரிவு சாலை அருகே சென்ற போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து, விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூ வீலரை ஓட்டிய சிவராமனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த சபாபதி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்பட காரணமான சிவராமன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.
Next Story