குமரியில் சாலையை சேதப்படுத்தி குடிநீர் இணைப்பு கொடுத்த நிர்வாகம்

குமரியில் சாலையை சேதப்படுத்தி  குடிநீர் இணைப்பு கொடுத்த நிர்வாகம்

சேதப்படுத்தப்பட்ட சாலை


குமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றியத்துக்குட்பட்ட பாலூர் ஊராட்சி பரவவிளை முதல் கல்லடை செல்ல சுமார் 10 வருடங்கள் முன் இணைப்புச்சாலை அமைக்கப்பட்டு இருந்தது. இச்சாலை தார் போடப்பட்டு அதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். சுமார் 500 மீட்டர் நீளமுள்ள இச்சாலை அமைந்துள்ள பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்குடும்பத்தினர் நடந்து செல்லவும் வாகனங்களில் செல்லவும் இச்சாலை மட்டுமே உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாலூர் ஊராட்சி சார்பில் மேற்கண்ட சாலையின் நடுப்பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்காக குழி தோண்டி குழாய்கள் பதித்து உள்ளனர். இதனால் சாலை முழுவதுமாக சேதமடைந்து உள்ளது. சாலை முழுவதும் சகதி நிறைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மட்டுமல்லாமல் பொதுமக்கள் நடந்து செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்படி பகுதியை ஆய்வு செய்து ரோட்டோரமாக குடிநீர் குழாயை அமைப்பதோடு, சாலையை சீரமைத்து தார் போட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Next Story