நாகை அருகே கீழ்வேளூர் துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா
ஆண்டு விழா
நாகை அருகே கீழ்வேளூர் துவக்கப்பள்ளியில் நடைப்பெற்ற ஆண்டு விழாவில் 80 S , 90 S பாடல்களுக்கு ஆட்டம் போட்டு அமர்க்களம் படுத்திய பள்ளி 2 K கிட்ஸ்; வண்ண, வண்ண உடைகளில் ஜொலித்த குழந்தைகளின் அசத்தலான நடனடத்தில் மெய் மறந்த பெற்றோர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் ஒரு தனியார் தொடக்கப் பள்ளியின் 48 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. பள்ளி தாளாளர்பழனிவேல் தலைமையில் நடைப்பெற்ற விழாவில் கல்வி குழுமத்தின் துணைத்தலைவர் சுரேஷ், கல்வி குழுமத்தின் செயலர் ப.பரமேஸ்வரி, கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ப.இலக்கியா முன்னிலை வகித்தனர்.
பள்ளி துணை முதல்வர் செல்வி வரவேற்று பேசினார். பள்ளி முதல்வர் குணவதி பள்ளியின் ஆண்டு அறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் பங்கேற்று முதல் மதிப்பெண் மற்றும் அதிக வருகை பதிவு பெற்ற மாணவ குழந்தைகளுக்கு கேடயமும், சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர் விளையாட்டு, டான்ஸ், பாடல், கல்வி என குழந்தைகள் எதில் அதிக ஆர்வமாக உள்ளார்கள் என பெற்றோர்கள் கண்காணித்து அதில் முக்கியத்துவம் கொடுத்து குழந்தைகளுக்களுக்கு கற்றுத் தர வேண்டும் எனவும் அப்போதுதான் அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. பாட்டு, பட்டி மன்றம், வில்லுப்பாட்டு என கலக்கிய மாணவ குழந்தைகள் தொடர்ந்து 80 S, 90 S பாட்டுமுதல் தற்போதைய பாடல்கள் என ஆட்டம் போட்டு அமர்க்களப்படுத்தினர். வண்ண வண்ண உடைகளில் டிஜிட்டல் பேனரின் மாயாஜாலத்தின் நடனமாடிய குழந்தைகளை பெற்றோர்கள் மெய் மறந்து கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியினை ஆசரியர் கலைச் செல்வி தொகுத்து வழங்கினார். பள்ளி ஆசரியை சூரியமீனா நன்றி தெரிவித்தார்.இதில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துக் கொண்டனர். பள்ளி ஆண்டு விழாவில் பழைய பாடல் , புதிய பாடல்களுக்கு பெரியவர்களுக்கு இணையாக மாணவ குழந்தைகள் நடனமாடி அசத்தியது அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றது.