கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சங்கத்தினர்
சி ஐ டி யு வில் உள்ள மக்களைத் தேடி மருத்துவ பணியாளர்கள் சங்கம், சாலையோர வியாபாரிகள் சங்கம், நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்திய தொழிற்சங்க மையமான சிஐடியு சார்பில் அதன் மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமையில் பிப்ரவரி 19ஆம் தேதி மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கம், பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர் தொழிலாளர் சங்கம், நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் சங்கம், ஆகியோர் தங்கள் கோரிக்கைகளை , மாவட்ட ஆட்சியரை சந்தித்து தனித்தனியாகமனு அளித்தனர், இதைத் தொடர்ந்து அவர்கள் தெரிவித்த போது மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் பணி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவர்களுக்கு கூடுதலாக ஆஸ்மான் காப்பீட்டு திட்டபணிகளை திணிக்கின்றனர் இதனால் அவர்களுக்கு பணிச்சுமையுடன் ,மொபைல் டேட்டா போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருப்பதால் அதனை திணிக்க கூடாது, மேலும் எம் எல் எச் பி (MLHP) ஊழியர்களின் பணிச்சுமையையும் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் மீது திணிக்கப்படுகிறது அதை நிறுத்த வேண்டும் என்றும் இதற்கான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருப்பதாகவும் இதே சிஐடியு அமைப்பில் உள்ள சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர் தொழிலாளர் சங்கத்தின், பெரம்பலூர் நகர வியாபார குழு கூட்டத்தை கூட்டிடவும் மேலும் நகராட்சி நிர்வாகம் வெண்டர் கமிட்டி கூட்டத்தை கூட்டி தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் அனைத்து வார்டுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கையை முன்வைத்தும் இதேபோன்று சி ஐ டி யு நகராட்சி ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கையான மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதிய தொகை வழங்கிட வேண்டும், தொழிலாளர் களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இபிஎப் (EPF) தொகை செலுத்தாமல் மோசடி செய்யப்பட்டுள்ளது எனவே விசாரணை செய்து ஒப்பந்த ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணபலன்களை வழங்க நடவடிக்கை, எடுக்க வேண்டும் என கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருப்பதாக தெரிவித்தனர், இந்நிகழ்ச்சியின் போது மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வி, தலைவர் கொளஞ்சி, சி ஐ டி யு மாவட்ட தலைவர் ரங்கநாதன் , உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
Next Story