தங்கச்சி படத்தை வைத்து விஜய் உருவத்தை வரைந்த ஆசிரியர்

தங்கச்சி படத்தை வைத்து விஜய் உருவத்தை வரைந்த ஆசிரியர்

தங்கச்சி படத்தை வைத்து விஜய் உருவத்தை வரைந்த ஆசிரியர்

கள்ளகுடிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஓவிய ஆசிரியர் விஜயின் தங்கை படத்தை கொண்டு அவரின் உருவத்தை வரைந்து வாழ்த்து தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த பிரபல ஓவியர் சு. செல்வம் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து வித்தியாசமான முறையில் கூறும் விதமாக விஜய்க்கு தங்கச்சி என்றால் உயிர், துருதுருவென்று இருந்த விஜய் இப்ப அமைதிக்கு காரணம் சிறு வயதிலேயே தன் அன்பு தங்கச்சி வித்யா மரணம், விஜய்யின் அன்பு "தங்கை போட்டோவாலேயே" நடிகர் விஜய் படத்தை ஓவியர் செல்வம் வரைந்தார். தமிழ் சினிமாவில் தற்போது உச்சநட்சத்திரமாக இருக்கும் நடிகர்களின் ஒருவர் தான் விஜய், இவர் படம் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படி இருக்கும்.

நடிகர் விஜய்க்கு தங்கை வித்யா என்றவங்க இருந்தது அனைவரும் அறிந்ததே, விஜய்க்கு தங்கை மீது எப்போதுமே பாசம் உண்டு, பால்ய வயதிலேயே தன்னுடைய தங்கையை இழந்துவிட்டது பற்றியும் தங்கை மீது வைத்திருந்த அன்பு குறித்தும் நிறைய இடங்களில் விஜய்யின் தந்தை சந்திரசேகரும், அம்மா ஷோபாவும் பேசியிருக்கிறார்கள், அதில் விஜய்யின் அம்மா சொன்னது விஜய்க்கு 9 வயசு ஆச்சு, தங்கை வித்யா மூன்றரை வயது இருக்கும் லுக்மியானு ஒரு நோய் வந்தது. ஒரு நாள் விஜய் பக்கத்துல இருக்கிறப்பவே கொஞ்சம் கொஞ்சமா மெல்ல மெல்ல மூச்சு திணறபடி வித்யா கண் மூடிட்டா தன்னுடைய கண் எதிரே தன் தங்கை உயிர் போனது விஜயால தாங்க முடியாம "அப்பா... "னு கதறின விஜயோட குரல் இப்ப வரைக்கும் என் காதல கேட்டுட்டேதான் இருக்கு என்று கூறியிருந்தார்.

தங்கை வித்யா பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்த விஜய், எனது வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால் அது என் தங்கை வித்தியாவின் உயிரிழப்பு தான், அதிலிருந்து மீள்வது கடினம் ஆனால் ஒன்று எனது தங்கையை நாங்கள் புதைக்கவில்லை, விதைத்திருக்கிறோம், அதனால்தான் எனக்கு இவ்வளவு தங்கைகள் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது தங்கச்சி மீது பாசம் கொண்ட விஜய்யின் பிறந்தநாளுக்கு, அவருடைய தங்கச்சியே பிறந்தநாள் வாழ்த்து கூறும் விதமாக, ஓவியர் செல்வம் விஜய் அவருடைய அன்பு தங்கை போட்டோவை நீர்வண்ணத்தில் தொட்டு நடிகர் விஜய் படத்தை "தங்கை போட்டோவாலேயே" ஐந்து நிமிடங்களில் ஓவியர் செல்வம் வரைந்தார். இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள், ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைய செய்தது. ஓவியர் செல்வம் வாழ்த்தினார்கள்.

Tags

Next Story