டாரஸ் லாரி மோதி ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது

டாரஸ் லாரி மோதி ஆட்டோ நொறுங்கியது
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள புத்தன் கடையில் இன்று காலையில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆட்டோ மீது டாரஸ் லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போல் சுக்கு நூறாக நொறுங்கியது. இதில் ஆட்டோவை ஒட்டி வந்த பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த ஐயப்பன் L46) என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி டிரைவர் லாரியை திருவட்டார் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி விட்டு, அவர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பகுதியில் டாரஸ் லாரிகளால் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் நடைபெறுவதாக புகார் உள்ளது.
