மருத்துவனை செல்லும் வழியில் ஆம்புலன்சிலேயே பிறந்த குழந்தை
விருதுநகரில் பிரசவத்திற்காக அழைத்துவரப்பட்ட பெண்ணிற்கு 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது.
விருதுநகர் அருகே பாலவநத்தம், கடம்பன்குளத்தைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரி 20. இவருக்கு தனது வீட்டில் இருந்தபோது திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பிரசவத்திற்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்வதற்காக 108 ஆம்புலன்ஸ் தொடர்பு கொண்டு உள்ளனர் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே சங்கரேஸ்வரிக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது.அதன் பின் தாய், சேய் இருவரையும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த பிரசவத்தை பாதுகாப்பாக மருத்துவரின் ஆலோசனைப்படி செய்த மருத்துவ உதவியாளர் காஹாமைதீன், டிரைவர் திருமலை கண்ணன் இருவரையும் ஊழியர்கள் பாராட்டி வருகின்றனர்.
Next Story