விழுப்புரத்தில் விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற சென்றவரின் பொருட்கள் மாயம்
பொருட்களை பரிகொடித்தவர்
விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலத்தில் இன்று காலை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாலையில் குறுகே லாரி கவிழ்ந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்ப்பட்டதும். இதனால் வாகன்ங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது அதில் லாரி ஓட்டுனர் காயமடைந்த நிலையில் அந்தரத்தில் தொங்கியுள்ளார். அப்போது கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணித்த கோயமுத்தூரை சேர்ந்த முரளி சங்கர் என்ற இளைஞர் ஒருவர் ஓட்டுனரை காப்பாற்ற சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது அவரது லேப்டாப், பணம், உடைமைகள், ஆவணங்கள் அவைத்திருந்த பையை திருடி சென்றுள்ளனர்.
காவல்துறையிடம் தெரிவித்ததற்கு போய் புகார் கொடுங்க பாக்கலாம் என சொல்லி இருக்கிறார்கள் : ஆபத்துக்கு உதவி செய்ய இடத்தில் அனைத்தையும் இழந்து செய்வதறியாது வீதியில் நிற்கும் இளைஞர் லேப்டாப் கிடைக்கவில்லையென்றால் எனது வேலை போய்விடும் என கூறியவாறு வேதனையோடு காத்திருக்கிறார்.