நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் - சிவகங்கையில் பரபரப்பு

நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் - சிவகங்கையில் பரபரப்பு
X

பாஜகவினர் முற்றுகை 

நிலுவை தொகை கேட்டு முற்றுகை
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் அரசு முதல் நிலை ஒப்பந்ததாரராக இருப்பவர் கந்தசாமி. இவர் பாஜகவில் மாநிலச் செயலாளராக உள்ளார். இந்நிலையில் இவர் சிவகங்கை நகராட்சி குண்டூரணி நடைபாதை அமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்தார். பணிகள் முடிந்த நிலையில் ரூபாய் 3.44 லட்சம் நிலுவை தொகை நகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நிலுவை தொகையை வழங்கக்கோரி பாஜகவினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story