அமலாக்கத்துறையை வைத்துக்கொண்டு பாஜக அரசு ஆட்டம் போடுகிறது

அமலாக்கத்துறையை வைத்துக்கொண்டு பாஜக அரசு ஆட்டம் போடுகிறது

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம்

ஒரு சர்வாதிகாரியின் அரசியல் முடிவு என்னவாக இருக்கும் என வரலாறு காட்டியிருக்கிறது. இந்த வரலாற்றை மோடி தெரிந்து கொள்ள வேண்டும். அமலாக்கத்துறை வைத்துக்கொண்டு பாஜக அரசு ஆட்டம் போடுகிறது, தேர்தல் தலைமை ஆணையரை மிரட்டல் செய்து பணியை ராஜினாமா செய்ய வைத்துள்ளனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி செல்வராசு சீர்காழியில் நடந்த கட்சி நிகழ்வில் பேசினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை எம்.பி செல்வராசு மேடையில் பேசியதாவது ஒரு சர்வாதிகாரிக்கு என்ன நடக்கும், ஒரு சர்வாதிகாரி அரசியல் முடிவு என்னவாக இருக்கும் என வரலாறு காட்டியிருக்கிறது.இந்த வரலாற்றை மோடி தெரிந்து கொள்ள வேண்டும்.

சிறுபான்மையினர்- முஸ்லிம் மக்கள் வாழுகின்ற காஷ்மீரை குலைப்பதற்காக அரசியல் சாசனம் 320 கலைக்கப்பட்டுள்ளது, மூன்று மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது ஜம்மு காஷ்மீர் லடாக் என மேலும் பாண்டிச்சேரி போல கவர்னர் ஆட்சி நடந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் மூன்று மாதத்திற்கு தேர்தல் நடத்த உத்தரவு போட்டுள்ளது, தற்போது வரை காஷ்மீரில் தலைவர்கள் வீட்டிற்குள் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள், சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.காஷ்மீர் சிறுபான்மையினர் முஸ்லிம் மக்களுக்கு முதல் அடி.

அமலாக்கத்துறை- அமலாக்கத்துறை அல்ல எதிர்க்கட்சிகளை ஆளுகின்ற மாநிலங்களின் அமலாக்கத்துறை வைத்து மிரட்டி வருகின்றனர், அமலாக்கத்துறை வைத்துக்கொண்டு பாஜக அரசு ஆட்டம் போடுகிறது, தேர்தல் தலைமை ஆணையரை மிரட்டல் செய்து பணியை ராஜினாமா செய்ய வைத்துள்ளனர் என நாகை எம்.பி செல்வராசு குற்றச்சாட்டு

Tags

Next Story