பயனாளிகள் பட்டியலின் பரப்புரை செய்யும் பாஜகவினர்
பயனாளிகள் பட்டியலின் பரப்புரை செய்யும் பாஜகவினர்
மோடி அரசால் பயன்பெற்ற பயனளாளிகள் பட்டியலுடன் பரப்புரை செய்யும் பாஜகவினர் மத்திய அரசு திட்டங்களில் நேரடியாக பயனடைந்த பயானளிகள் ஒவ்வொருவரையும் வீடுதேடி சென்று சந்திக்கும் “லபார்தி சம்பர்க் அபியான்” என்கிற பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்தை புதுக்கோட்டை பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ஏவிசிசி கணேசன் இன்று தொடங்கி வைத்தார்.
அதன்படி இலவச வீடு, வங்கிகடன்,சிலிண்டர் எரிவாயு இணைப்பு, குடிநீர் இணைப்பு,மருத்துவ காப்பீடு போன்ற 36 வகை மக்கள்நல திட்டங்களில் பயன்பெற்ற பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று மூன்றாவது முறையும் மோடி பிரதமராவதற்கு அவர்களின் ஆதரவை கேட்டு மோடியின் உத்திரவாதம் என்ற ஸ்டிக்கரையும் வீட்டின் சுவர்கள் கதவுகளில் ஒட்டி மோடி அரசின் சாதனை விளக்க பிரசுரங்களையும் பாஜகவினர் வழங்கினர்.
நிகழ்வுகளில் நகர தலைவர் லெட்சுமணன் உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன்,தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன்,நகர கிளைத் தலைவர் பானுமதி மற்றும் பூத்கமிட்டி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். பாஜகவினர் வீடுவீடாக சென்று மோடியின் சாதனையை சொல்லி மோடிக்கு ஆதரவு திரட்டும் இந்த முயற்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மத்திய அரசு முத்ரா கடன் திட்டத்தில் அம்பாள்புரம் ஐஓபி வங்கியில் கடனுதவி பெற்ற புதுக்கோட்டை மேல மூன்றாம்வீதியில் வசிக்கும் கருப்பையா என்ற பயனாளிக்கு சால்வை அணிவித்து அவர் வீட்டில் “மோடியின் உத்தரவாதம்” என்ற ஸ்டிக்கரை ஏவிசிசி கணேசன் ஒட்டினார்.