வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த 2 பேரின் உடல்கள் மீட்பு
தூத்துக்குடியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 17ஆம் தேதி கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 22 பேர் பலியாகி உள்ளதாக தெரிகிறது. இதில் 18 பேர் அடையாளம் காணப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினரிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே காணாமல் போன 2பேர் அடையாளம் காணப்பட்டது. தூத்துக்குடி கோரம்பள்ளம் நடுத்தெருவில் வசிப்பவர் குமார் இவரை மகன் பலவேசம் (31) இவர் கடந்த 20 ஆம் தேதி கோரம்பள்ளம் அருகில் காணாமல் சென்று விட்டார். இதற்கிடையே இவரது சடலம் கோரம்பள்ளம் ஐடிஐ அருகில் வெள்ளத்தில் மிதந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தூத்துக்குடி ஐயப்பன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகசாமி இவரு மகன் செந்தூர்பாண்டி (79) இவர் கடந்த 18ஆம் தேதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இவரை தேடும் பணி நடந்தது. இதற்கிடையே குறிஞ்சி நகர் 2வது தெருவில் இவரது பிணம் வெள்ளத்தில் மிதந்தது. தகவல் அறிந்ததும் சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம் சண்முக இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story