கடலில் தவறி விழுந்த மீனவரின் உடல் சடலமாக மீட்பு
மீனவரின் உடல் சடலமாக மீட்பு
செங்கல்பட்டு மாவட்டம், பனையூர் பெரியகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏசுராஜ் 50; இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு தனது மகன் விஷ்ணு 22; மற்றும் தனது மாமா குணசேகரன் 35; ஆகியோருடன் தனது நாட்டுப் படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்று உள்ளார். கரையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் அளவிற்கு உள்ளே சென்று வலையை விரித்துவிட்டு அனைவரும் படகிலேயே ஓய்வெடுத்துள்ளனர். அப்போது அதீத காற்று வீசியதாலும், கடலின் அலையினாலும் படகை இயக்கிய விஷ்ணு நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்துள்ளார். சத்தம் கேட்டு ஏசுராஜ் உடனடியாக படகைத் திருப்பி விஷ்ணு விழுந்த இடத்தில் தேடியுள்ளார், கடல் கடலின் அலை அதிகமாக இருந்ததாலும் வெளிச்சம் இல்லாத காரணத்தாலும் விஷ்ணுவை கண்டுபிடிக்க இயலவில்லை. பின் கரைக்கு வந்து இதுகுறித்து செய்யூர் போலீசார் மற்றும் முதலியார்குப்பம் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த முதலியார்குப்பம் கடலோர காவல் படையினர் மற்றும் பனையூர்பெரியகுப்பம், முதலியார்குப்பம் மற்றும் பனையூர்சிறியகுப்பம் கிராம மக்கள் என 50க்கும் மேற்பட்ட படகுகளில் கடலில் கடந்த இரண்டு நாட்களாக விஷ்ணுவை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடலில் தவறி விழுந்த இடத்திலேயே விஷ்ணு உயிரிழந்த நிலையில் நேற்று காலை 11. 00 மணியளவில் சடலமாக அப்பகுதி மீனவர்களால் மீட்கப்பட்டார்.
Next Story