குவைத்தில் இறந்த பேராவூரணி வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

குவைத்தில் இறந்த பேராவூரணி வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

அஞ்சலி செலுத்திய ஆட்சியர்

குவைத்தில் இறந்த பேராவூரணி வாலிபர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வழங்கி ஆட்சியர் அஞ்சலி 

குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான பேராவூரணி பகுதியைச் சேர்ந்த இளைஞரின் உடல் சொந்த கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று இறந்த வாலிபரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அரசு அறிவித்த நிவாரணத் தொகையை அவரது குடும்பத்தினருக்கு வழங்கினார்.

வளைகுடா நாடான குவைத் நாட்டில் மங்காஃப் என்ற இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஆதனூர் பகுதியை சேர்ந்த ரூனாஃப் ரிச்சர்ட் ராய் என்பவருடைய உடல் குவைத் நாட்டில் இருந்து விமான மூலம் கொண்டு கேரளா மாநிலம் கொச்சி கொண்டு வரப்பட்டது.

அங்கு கேரள முதல்வர் பினராய் விஜயன், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி செலுத்திய பின்னர், கொச்சியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த கிராமத்திற்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு கொண்டு வரப்பட்டது.

அவரது உடலைக் கண்டு பெற்றோர்கள், உறவினர்கள், கிராமத்தினர் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து ரூனாஃப் ரிச்சர்ட் ராய் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, வட்டாட்சியர் தெய்வானை ஆகியோர் அஞ்சலி செலுத்தி, தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிவாரணத் தொகை ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அ

தைத் தொடர்ந்து அவரது உடல் அவரது வீட்டில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித அன்னாள் ஆலயத்தில் வைக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனை மற்றும் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சனிக்கிழமை (அதிகாலை 1.30 மணிக்கு) பின்னர் ஆர்.சி கல்லறை தோட்டத்தில் உடல் நல்லடக்கம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story