ஆளுங்கட்சி துணையோடு தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது- பிரேமலதா

ஆளுங்கட்சி துணையோடு தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது-  பிரேமலதா

பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு  

ஆளுங்கட்சியின் துணையோடு தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது எனவும், தமிழகத்தில் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளதாகவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.

கோவையில் கட்சி சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க விமானம் மூலம் கோவை வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

.அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் நடைபெறும் விஷயங்கள் பத்திரிகையாளர்கள் ஆகிய உங்கள் தெரியும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் 69 பேரின் உயிர்களை இழந்திருப்பதாக தெரிவித்தார்.சட்டமன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் மூத்த அமைச்சர் பேசுகையில் சரக்கில் கிக் இல்லாத காரணமாக மக்கள் கள்ளச்சாராயம் நோக்கி செல்கின்றனர் என்று மிக மோசமான பதிவு வைத்ததை தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

முதல்வர் முன் மூத்த அமைச்சர் ஒருவர் சட்டமன்றத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் கிக்கு-சரக்கு என கிறுக்குத்தனமாக பேசுவதாகவும் 69 உயிருக்கும் முழு சாட்சி நீங்கள்தான் என்பதை அவரே ஒப்பு கொண்டு உள்ளார் என்பதை இங்கே பார்க்க முடிவதாகவும் கள்ளச்சாராயம் வரக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாடு முழுக்க டாஸ்மார்க் கடைகளை நடத்தி ஆண்டு முழுவதும் 45 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து மக்கள் உயிரை பணயம் வைத்து இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழகத்தையும் குடிகாரர்களாக மாற்றிய பெருமைதான் இந்த ஆட்சியாளர்களுக்கு இருப்பதாகவும் பிறகு எதற்கு டாஸ்மாக் வைத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பியவர் அதில் தரம் இல்லை என்பதை மூத்த அமைச்சர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.

யார் கள்ளச்சாராயம் நோக்கி செல்ல வைக்கிறார்கள் என்பதை தெளிவாக தெரிவதாகவும் இது கண்டனத்திற்குரிய விஷயம் என்றவர் குடியை கொடுத்து கோடியை நீங்கள் சம்பாதிக்க கோடிக்கணக்கான மக்களின் உயிரை பணயம் வைத்துள்ளார்கள் என குற்றம் சாட்டினார். கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடைபெற்ற நிலையில் பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்து வாயை அடைத்து விடுகின்றனர் ஆனால் மூத்த அமைச்சர் சட்டசபையில் அவர்கள் திருந்தினாலே தவிர திருத்த முடியாது என்று சொல்கிறார்.எல்லா இடங்களிலும் காவல் நிலையம் வைக்க முடியாது என்று செல்பவர்கள் எப்படி டாஸ்மார்க் மட்டும் வைக்க முடிகிறது என கேள்வி எழுப்பியவர் போலீஸ் ஸ்டேஷன் வைக்க முடியாதா என்ற மக்கள் கேள்வியை நாங்கள் எழுப்புகிறோம் என்றார்.தமிழக ஆளுநரை சந்தித்து சிபிஐ வழக்காக மாற்ற வேண்டும் என்று கோரிக்க வைத்ததாகவும் அப்போது மிகப்பெரிய வருத்தத்தை பதிவு செய்ததாக கூறினார்.

சென்னையில் கழிவு நீருடன் குடி தண்ணீரும் கலந்து வந்த நீரை குடித்த வேலைக்காக வந்த பீகாரை சேர்ந்த தம்பதியினரின் சிறு வயது குழந்தை மற்றும் 11 வயது குழந்தை உடல்நலம் பாதிக்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்ட நிலையில் ஒரு குழந்தை இறந்து விட்ட நிலையில் மற்றொரு குழந்தையை அட்மிட் செய்வதற்காக 2000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர் எனவும் உயிருக்கு இங்கு எந்த மரியாதையும் கிடையாது பணம் மட்டுமே எனவும் பிரதானமாக உள்ளதாக கூறியவர் அரசு மருத்துவமனையில் அனுபதிப்பதற்கு கூட 2000 ரூபாய் கொடுத்தால் தான் அட்மிட் செய்வேண்டும் என்று சொன்னால் இந்த ஆட்சியின் அவல நிலை என்ன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது என்றார்.

மரணங்கள் ஓயவில்லை நிச்சயமாக மீண்டும் ஒரு கள்ளச்சாராய மரணம் தமிழகத்தில் வரக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். கள்ளச்சாராயம் காய்ச்சினால் ஆயுள் தண்டனை மற்றும் 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார் இங்கே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்துமா என்பதை முதல்வர் சொல்ல வேண்டும் எனவும் இவ்வளவு ஆண்டுகள் தூங்கிவிட்டு இப்போதுதான் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்தது போல இப்போதுதான் முதல்முறையாக நடந்தது போல தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். கள்ளக்குறிச்சி- பெண்ணகரம் பகுதிக்கு நேரடியாக சென்று அனைவரையும் சந்தித்துதான் இங்கே உங்கள் முன்னால் பதிவு செய்கிறேன் என்றவர் மொத்தமாக ஆளுங்கட்சியின் துணையோடு தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது எனவும் அந்த கல்வராயன் மலையில் இதற்கு முழு பொறுப்பு அமைச்சர் முத்துசாமி அவர் பதவி விலக வேண்டும் அப்போதுதான் இதை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியும். மேலும் இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பை அரசுதான் ஏற்க வேண்டும் என்றார்.

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் இருப்பதாகவும் அரசு மற்றும் ஆட்சியாளர்கள் காவல்துறையினர் மக்கள் என அனைவரும் இணைந்து இரும்பு கரம் கொண்டு அடக்கினால் தான் இது சாத்தியமாகும் என்றார்.கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்பது கொங்கு மண்டல மக்கள் விவசாயிகளின் பல நாள் கோரிக்கையாக உள்ளது.விஷச்சாராயம் டாஸ்மார்க் மதுபானங்களை விட கள் மிகவும் நல்லது உயிர் கேடு எதுவும் இருக்காது மிகவும் உடலுக்கு நல்லது என்ற ஒரு கருத்து பொதுவாக உள்ளது இதனை நிச்சயம் அரசியலமை பரிசீலனை செய்ய வேண்டும் என்றார். கனிமொழி மதுவினால் தான் தமிழகத்தில் அதிக இளம் விதவைகள் உள்ளனர் என்று கூறினார்.

ஆனால் இப்போது ஏன் பயந்து ஓடுகிறார் கனிமொழி என கேள்வி எழுப்பியவர் கலைஞர் இருந்தபோது பூரண மதுவிலக்கு என்று கூறியவர் ஸ்டாலின் உதயநிதி ஆட்சி அமைந்ததும் முழு மதுவிலக்கு என்று கூறினார்.இப்போது மூன்று வருடம் கலந்து 4 ஆண்டுகளை நோக்கி செல்கிறது நாங்கள் ஓடி ஒளியவில்லை எதையும் மறைக்கவில்லை என ஸ்டாலின் கூறுகிறார். உண்மையிலேயே ஓடி ஒழியவில்லை என்றால் நீங்கள் கொடுத்த வாக்குறுதிபடி முழு மதுவிலக்கை கொண்டு வந்து கள்ளச்சாராயம் இனி எங்கும் காய்ச்சப்படவில்லை என்பதை சொல்ல வேண்டும் என்றார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எத்தனை முறை வெளிநடப்பு செய்துள்ளனர் எனவும் அவை நடக்க விடாமல் தடுத்ததுடன் உச்சபட்சமாக சபாநாயகர் தனபாலின் இருக்கை சென்றதுடன் அட்ராசிட்டி செய்தனர் அதிமுகவினர் அவ்வாறு செய்யாமல் கள்ளச்சாராய விவாகரத்தை பேச வேண்டும் என்று அனுமதி கேட்டார்கள் அதற்கு அனுமதி மறுக்கபட்டு ஜனநாயகம் படுகொலைக்கு தள்ளப்பட்டு மீண்டும் ஒரு எமர்ஜென்சி ஆட்சி போல தான் நடந்து கொண்டுள்ளது.

இதுதான் உண்மை மக்கள் இதை பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் கூலி சேதாரம் இல்லாமல் 40க்கு 40 வந்துவிட்டது அடுத்து 200க்கு 200 நாங்கள்தான் எனவும் விக்கிரவாண்டி தேர்தலில் அடுத்த தேர்தலை நோக்கி தான் இந்த ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள் தவிர அடுத்த தலைமுறையை யோசிக்கின்ற கட்சியாக இன்றைக்கு திமுக இல்லை என்றார்.நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி போன்ற பல்வேறு பணிகளை செய்து வந்தவர் கேப்டன் என்றும் இன்றைக்கு அதை விஜய் அவர்கள் செய்து வருகிறார் அதற்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் இனி வரும் காலங்களில் அவருடைய செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும் என்றார்.

Tags

Next Story