ஏரியில் தவறி விழுந்து சிறுவன் பலி!

ஏரியில் தவறி விழுந்து சிறுவன் பலி!

 ரித்திக் ரோஷன்

கண்ணமங்கலம் அருகே ஏரியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த படவேடு வேட்டகிரிபாளையம் கொட்டமேடு பகுதியை சேர்ந்தவர் சரத், மனைவி துர்கா. இவர்களது மகன் ரித்திக் ரோஷன் (வயது 4). துர்க்காவின் தந்தை சங்கர் துவரந்தல் ஏரியில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அவருக்கு பின்னால் யாருக்கும் தெரியாமல் சென்ற சிறுவன் ஏரியில் தவறி விழுந்துள்ளான். இதனையடுத்து சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர் சிறுவன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story