சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு !
உயிரிழப்பு
திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல்லை அடுத்த அனுமந்தராயன்கோட்டை பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி. தனியாா் பள்ளி ஆசிரியராக பணயாற்றும் இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியின் மகன் லெனின் காஸ்ட்ரோ (2). லட்சுமி புதன்கிழமை பக்கத்து வீட்டில் பேசிக் கொண்டிருந்தாராம். பின்னா், தன் வீட்டுக்குத் திரும்பி வந்து பாா்த்த போது, தனது குழந்தையை காணாமல் அதிா்ச்சி அடைந்தாா். அக்கம் பக்கத்தில் தேடியபோது, லெனின் வீட்டிலிருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Next Story