மண்ணெண்ணெய் குண்டு வீசிய சிறுவர்கள்
பைல் படம்
திண்டுக்கல் அருகே சூசைமாணிக்கம் என்பவரின் மகன் மீதுள்ள ஆத்திரத்தில், மேட்டுப்பட்டி சிறுவா்கள் 4 பேர் மண்ணெண்ணெய் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மொட்டணம்பட்டியைச் சேர்ந்தவா் சூசைமாணிக்கம் (48). கூலித் தொழிலாளியான இவா் கடந்த 8-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது, மா்ம நபா்கள் சிலா் இவரது வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டுகளை வீசிவிட்டு, இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்றனா். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் நடத்திய விசாரணையில், சூசை மாணிக்கத்தின் மகனுக்கும், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த சிறுவா்கள் 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், இதில் ஆத்திரமடைந்த 4 சிறுவா்களும் மண்ணெண்ணெய் குண்டுகளை வீசியதும் தெரிய வந்தது. 4 சிறுவா்களையும் போலீஸாா் கைது செய்து, திண்டுக்கல் இளஞ்சிறாா் நடுவா் மன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தினா்.
Next Story