துணிப்பை, மரக்கன்று கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மணமக்கள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் இந்திய அரசின் விளையாட்டு துறை இயக்குனராக பணிபுரிந்து வரும் உசிலம்பட்டி நல்லபெருமாள்பட்டியை சேர்ந்த ராம்குமாருக்கும் அசாமில் இந்திய அரசின் விளையாட்டு துறை இயக்குனராக பணிபுரியும் வர்ஷாவிற்கும் திருமணம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பசுமை புரட்சிக்கு வித்திடும் வகையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கனவை நிறைவேற்றும் வகையிலும் மரம் வளர்ப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மணமக்கள் தங்களை வாழ்த்த வந்திருந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கியும் நெகிழிப்பையை ஒழிக்கும் விதமாக துணிப்பையை உபயோகப்படுத்த வலியுறுத்தும் வகையில் துணிப்பை கொடுத்தும் நெகிழி பையினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதன் மூலம் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உற்றார் உறவினர்கள் பலர் பாராட்டுகளை தெரிவித்து வாழ்த்தினர்.இந்நிகழ்வில் நல்லபெருமாள்பட்டி குபேந்திரன் -செல்வி,ராம்பிரசாத், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிலன்,மதுரை ஆதீனம்,உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன்,மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியாகௌரி,ஆர்எஸ்எஸ் தென் பாரத தலைவர் மானனீய வன்னியராஜன்,ஆர் எஸ் எஸ் தமிழக தலைவர் மானனீய ஆடலரசன், இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம்,பாஜக விளையாட்டு துறை திறன் மேம்பாட்டு துறை தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ,தொழிலதிபர்கள், உற்றார் உறவினர்கள், பொதுமக்கள் உட்படபலர் கலந்து கொண்டனர்