ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாலப்பணிகள்

ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாலப்பணிகள்

பாலப்பணிகள் 

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் செங்கமங்கலம் அருகே பாலம் கட்டுமானப் பணி மந்தமாக நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேராவூரணியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் செங்கமங்கலம் மூவேந்தர் மேல்நிலைப்பள்ளி அருகில், கல்லணை கால்வாய் கிளை வாய்க்கால் பாலம் உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலத்தின் வழியாக தினசரி நூற்றுக்கணக்கான அரசு, தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மணல், ஜல்லி செங்கல் லாரிகள் சென்று வந்த நிலையில் பாலம் வழுவிழந்ததால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக பாலத்தின் ஒரு பாதியை உடைத்து புதிய பாலம் கட்டுமானப்பணியும், ஒரு பாதியில் போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. போக்குவரத்திற்கு பயனற்று குறுகிய பகுதியாக உள்ளதால். லாரி, பேருந்து ஓட்டுநர்கள் அச்சத்துடனே பாலத்தை கடக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக பாலம் பணிகள் நடைபெறாமல் உள்ளது. எனவே விபத்துகள் ஏற்பட்டு அசம்பாவிதம் நடக்கும் முன் பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு பாலத்தை கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story