அண்ணனை வெட்டி கொலை செய்து புதைத்த தம்பி கைது !!
கொலை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் அடுத்த சாவடியூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் இவரது உடன் பிறந்த தம்பி ரகு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில், அண்ணன் மோகன் மற்றும் தம்பி ரகு இருவரும் இரவு நேரத்தில் ஒன்றாக மது அருந்துவது வழக்கமாக வைத்துள்ளனர்.
நேற்று இரவு வழக்கம் போல் இவரும் ஒன்றாக சேர்ந்து சாவடியூரில் மது அருந்திக் கொண்டிருந்தனர் அப்போது மோகன், தம்பி ரகுவிடும் நீ மட்டும் திருமணம் செய்து குடும்பத்துடன் சந்தோஷமாக உள்ளாய். எனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க முடியவில்லையா என்று கூறி தகராறு ஈடுபட்டனர். தகராறுமுற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ரகு அருகில் இருந்த கொடுவளால் அண்ணன் மோகனின் கழுத்தில் வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் மோகன் துடிதுடித்து இறந்துள்ளார்.
அண்ணன் இறந்துவிட்டது அறிந்த ரகு அருகே உள்ள குப்பை கழிவுகள் கொட்டும் குழியில் மோகனின் உடலை புதைத்து விட்டு வீட்டுக்கு சென்று மனைவி தீபாவிடம் கூறியுள்ளார். உடனடியாக தீபா காரிமங்கலம் மூலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காரிமங்கலம் காவல்துறையினர் மோகனின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரகுவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். குடிபோதையில் அண்ணனை தம்பி வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.