குறைகளை தெரிவிக்க பிரச்சார வாகனங்கள் பா ஜ மாவட்ட தலைவர் பேட்டி

குறைகளை தெரிவிக்க பிரச்சார வாகனங்கள் பா ஜ மாவட்ட தலைவர் பேட்டி

 பாஜக மாவட்ட தலைவர் பேட்டி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக அரசின் சாதனைகளை விளக்க பிரச்சார வாகனம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தர்மராஜ் நேற்று நாகர்கோவிலில் உள்ள அலுவலகத்தில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது, பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டு கால ஆட்சியை நிறை செய்துள்ளார் மூன்றாவது முறையாக அடுத்த கட்ட தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா தயாராகி வருகிறது.

பாரதிய ஜனதா கட்சி கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ள திட்டங்களை மக்களிடம் சேர்க்கும் வகையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கோடி மக்களின் கருத்துக்களை கேட்டு அதனை தேர்தல் அறிக்கையில் சேர்க்கும் வகையில் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு இரண்டு எல் இ டி திரையுடன் கூடிய வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி கன்னியாகுமரி தொகுதிக்கும் இரண்டு எல் இ டி திரைவசதி கொண்ட வாகனங்கள் வந்துள்ளன. அந்த வாகனங்கள் அனைத்து கிராமங்களிலும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அந்த வாகனத்தில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் புகார் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த புகார் பெட்டியில் பொதுமக்கள் நாட்டின் வளர்ச்சி பற்றிய தங்களுடைய கருத்துக்களை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கையில் மக்களின் கருத்துகள் சேர்த்துக் கொள்ளப்படும் என்று கூறினார். இந்த பேட்டியின் போது பாரதிய ஜனதா மாநில செயலாளர் மீனாதேவ், மகளிர் அணி செயலாளர் உமாரதி ராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story