மாற்றிப் பேசிய வேட்பாளர் - வாக்காளர்கள் அதிர்ச்சி
தேர்தல் பிரசாரம்
சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப சிதம்பரமும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேவநாதன் யாதவும், அதிமுக சார்பில் சேவியர்தாசும் களம் காண்கின்றனர். தேர்தல் தேதி நெருங்கிய சூழலில் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செல்லும் பகுதியில் தேவநாதன் யாதவ், தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
அப்போது பிரச்சாரத்தில் பேசுகையில், பாஜக ஆட்சியின் சாதனைகளை கூறி வாக்கு கேட்டு வந்ததாகவும் 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் பாகிஸ்தானுக்குள் சென்று தீவிரவாத கும்பலை அழித்து தீவிரவாதத்தை ஒழித்ததாகவும், இந்திய பொருளாதாரத்தை காங்கிரஸ் கட்சியிடமிருந்து மீட்டெடுத்து பாஜக ஆட்சியில் பொருளாதாரத்தை அழித்துவிட்டு வந்ததாக கூறினார். உடனடியாக தவறாக பேசியதை உணர்ந்த அவர் மீண்டும் பொருளாதாரத்தை வளர்த்துட்டு வந்தாக மாற்றிக்கொண்டு பேசினார். இதனால் அப்பகுதியில் சலசலப்பு நிலவியது.