இருதய உட்புகுத்து ஆய்வகம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது

X
இருதய உட்புகுத்து ஆய்வகம்
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருதய உட்புகுத்து ஆய்வகம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருதய உட்புகுத்து ஆய்வகம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக உறைவிடம் மருத்துவ அலுவலர் டாக்டர் ஜே. சைலஸ் ஜெயமணி வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த டிசம்பர் மாதம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இருதய உட்புகுத்து ஆய்வகத்தின் கருவிகள் அரசு மற்றும் உயர் அதிகாரிகளால் சீரிய முயற்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு பழுது சரிபார்க்கப்பட்டு 56 நாட்களுக்குப் பின் பிப்.12 முதல் மக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் இயக்கப்படுகிறது. இதற்கு முன் நடைபெற்ற மாதிரியே மாரடைப்பு சிகிச்சை முறைகளான ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சைகள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இருதயப் பிரிவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று உறைவிடம் மருத்துவ அலுவலர் டாக்டர் ஜே. சைலஸ் ஜெயமணி தெரிவித்துள்ளார்.
Next Story
