மதுராந்தகம் அருகே சாலை பள்ளத்தில் சிக்கிய ஆட்சிஸ்வரர் கோவில் தேர்

மதுராந்தகம் அருகே சாலை பள்ளத்தில் சிக்கிய ஆட்சிஸ்வரர் கோவில் தேர்

பள்ளத்தில் சிக்கிய தேர்

மதுராந்தகம் அருகே ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ தேர் சாலையின் பள்ளத்தில் சிக்கியதில் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளகினர்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் நகரில் நால்வரால் பாடல் பெற்ற சைவ திருத்தலமான ஸ்ரீ இளங்கிலி அம்மன் உடனுறை ஸ்ரீ ஆட்சிஸ்வரர் திருக்கோயில் உள்ளது.. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் விழா நடைபெறும்.

கடந்த தமிழ் புத்தாண்டு அன்று கொடியேற்றமும்,மூன்றாம் நாள் அதிகார நந்தி சேவையும், ஐந்தாம் நாள் திருக்கல்யாணம் ஏழாவது நாளான இன்று திருத்தேரோட்டமும் நடைபெற்றது.. காலை தேரில் சுவாமியும்,அம்மனும் எழுந்தருளினர். அதன் பின்னர், சிவசிவ என பக்தர்களின் கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கோவிலின் மாட வீதியான தெருவில் வரும்பொழுது சிமெண்ட் சாலையில் வலது பக்கமாக தேரின் இரு சக்கரங்கள் சிக்கியது. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினார்கள்

.அங்கிருந்த காவல்துறையினர் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க தேரின் பக்கத்தில் பக்தர்களை யாரும் அனுமதிக்காமல் அப்புறப்படுத்தினார்கள். பிறகு 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஜே.சி.பி., இயந்திரம் மூலம் தேரை இழுத்தனர்..

Tags

Next Story