ஊத்தங்கரை அருகே பேருந்து நிலையத்தை திறந்து வைத்த முதல்வர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில்1.84 கோடி 84 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் புனரமைக்கப்பட்டு துவக்கப்பட்ட பேருந்து நிலையத்தைதமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய பேருந்து நிலையம் கடந்த 1985 ஆம் ஆண்டு கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு அண்ணா பேருந்து நிலையம் என பெயர் சூட்டி அழைக்கப்பட்டது மீண்டும் அதே பெயரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புதிய பொலிவுடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் இந்த நிகழ்வில் ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர், அமானுல்லா ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ், செயல் அலுவலர் ரவிசங்கர்,வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்