திருச்செங்கோட்டில் அறிவு சார் மையத்தை துவக்கி வைத்த முதல்வர்

திருச்செங்கோட்டில் ஒரு கோடியே ரூ89 லட்சம் மதிப்பிலான அறிவு சார் மையத்தை, முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக திறந்து வைத்தார்.

இன்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு திட்ட பணிகளை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் ஒரு கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவு சார் மையத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் இந்த அறிவு சார் மையத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது கணினிகள் மற்றும் இணையம் வாயிலாக பல்வேறு வகைகளில் மாணவ மாணவிகள் தகுதி தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது இங்கு மாணவ மாணவிகள் அமர்ந்து படிக்கவும் பயிற்சி எடுக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது தொடுதிரை வசதி கொண்ட பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி மாணவ மாணவிகள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது முதல்வர் திறந்து வைத்த பின்பு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நகர அமைப்பு மண்டல திட்ட குழு உறுப்பினரும், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும்மானமதுரா செந்தில் திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு நகர்மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன், ஆகியோர் குத்துவிளக்கேற்றி பொது மக்களுக்கு கட்டிடத்தை திறந்து வைத்தனர் நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, நகராட்சி பொறியாளர் சரவணன், நகர் மன்ற உறுப்பினர்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story